/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.114.43 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள்
/
ரூ.114.43 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள்
ADDED : நவ 20, 2024 01:58 AM
ரூ.114.43 கோடி மதிப்பில்
வளர்ச்சி திட்டப் பணிகள்
கரூர், நவ. 20-
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், 114.43 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை, கலெக்டர் தங்கவேல் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஊராட்சி ஒன்றியத்தில், 144.29 கோடி ரூபாய் மதிப்பிலான, 5,578 திட்டப்பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு, 114.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4,835 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள, 743 பணிகள் நடந்து வருகிறது. தும்பிவாடி பஞ்., புரவிபாளையத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம், 18 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டுமான பணிகளையும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் பயனாளிகள் இருவர் தலா, 3.10 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வரும் தனி நபர் இல்ல கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 79.82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சூடாமணி முதல் வலையனுார் வரை நடக்கும் சாலை மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்து, உரிய கால அளவில் முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீ லேகா தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.