/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாநகராட்சியில் நான்கு ஆண்டுகளில் பல ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டப்பணி
/
கரூர் மாநகராட்சியில் நான்கு ஆண்டுகளில் பல ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டப்பணி
கரூர் மாநகராட்சியில் நான்கு ஆண்டுகளில் பல ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டப்பணி
கரூர் மாநகராட்சியில் நான்கு ஆண்டுகளில் பல ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டப்பணி
ADDED : ஜூலை 13, 2025 01:28 AM
கரூர், கரூர் மாநகராட்சியில், நான்கு ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாயில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரூர் மாநகராட்சியில், 2021 - 2025-ம் ஆண்டு வரை, 216.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 264 திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. அதில், 148.79 கோடி ரூபாய் மதிப் பீட்டில், 216 திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
தொடர்ந்து, 67.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 48 திட்டப்பணிகள் நடந்து வரு கின்றன. அடல் புத்துணர்ச்சி மற் றும் நகர்ப்புற மாற்றத்திற்கான இயக்கம் திட்டத்தின் கீழ், 2023 - -2024-ம் ஆண்டு, 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 2 திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ளன.
தமிழக நகர்ப்புற சாலை உள்கட் டமைப்பு திட்டத்தில், 2௦21--2022ம் ஆண்டு, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 11 திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளன. தொடர்ந்து, 2024--2025ம் ஆண்டு, 19.94 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 25 திட்டப்பணிகள் நடந்து வருகின் றன. 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 2021--22-ம் ஆண்டு, 1.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட் டப்பணிகள் தொடங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
நுாலகம் மற்றும் அறிவுசார் மையம், 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. 98.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 669 சாலை பணிகள் முடிக்கப்பட்டு, 266 பணிகள் நடக்கின்றன.
குடிநீர், திடக்கழிவு, திரவக் கழிவு பணிகளுக்கு, 3.53 கோடி ரூபாயில், 29 வாகனங்கள் வாங்கப் பட்டுள்ளன. 12.50 கோடி ரூபாயில், 8,54௮ எல்.இ.டி., விளக்குள் பொருத்தப்பட்டுள்ளன. குடிநீர் பணிகள், 120.36 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 7.12 கோடி ரூபாயில், பூங்கா பணிகள் முடிக்கப்பட்டு, 3ல் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
கரூர் திருமாநிலையூரில், 40 கோடி ரூபாயில் புதிய பஸ் ஸ்டாண்ட், 9.86 கோடி ரூபாயில், கரூர் காம ராஜர் மார்க்கெட், வெங்கமேடு மீன் மார்க்கெட் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
மேலும், 10 கோடி ரூபாயில், கரூர் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் கட்டுமான பணி நடந்து வருகிறது.
கலங்கரை விளக்க திட்டத்தின் கீழ், 130.70 கோடியில், குடிநீர் அபிவிருத்தி பணிகள், 395.96 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை விரிவாக்க பணிகள் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, பல ஆயிரம் கோடி ரூபாயில், நான்கு ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி
கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.