ADDED : செப் 10, 2026 07:03 AM

கரூர்:கிருஷ்ணராயபுரம்
ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலராஜபுரம், திருக்காம்புலியூர்
ஆகிய பஞ்.,களில் பல்வேறு வகையான வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து,
கலெக்டர் முத்துக்குமரன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆண்டிபாளையம்
கிராமத்தில், 2.70 லட்சம் ரூபாய் மதிப்பில் விவசாயிகளுக்காக
உற்பத்தி செய்யப்படும் காய்கறி மற்றும் பழங்களின் நாற்றுகளை
பார்வையிட்டு, முறையாக பராமரிக்க அலுவலர்களுக்கு
உத்தரவிட்டார். மேட்டு திருக்காம்புலியூர் கிராமத்தில், 59.54
லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாயனுார் செங்கல் சாலை முதல், மேட்டு
திருக்காம்புலியூர் வரை அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை
பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்,
அருகிலிருந்த அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ரேஷன்
கடையில் பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
