ADDED : செப் 10, 2026 07:03 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி
மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இரவு நேரத்தில் மின்தடை
ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
அரவக்குறிச்சி
மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்ட
குடியிருப்புகள் உள்ளன. கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக இரவு 10:30
மணியளவில் மின் தடை ஏற்பட்டு, 11:00 மணிக்கு மீண்டும் வந்து
விடுகிறது. கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக தினமும், மின் தடை
ஏற்படுவதால் குடியிருப்புவாசிகள் புலம்புகின்றனர்.
அரை மணி நேர மின் துண்டிப்பை பயன்
படுத்தி, திருட்டு சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
அரை
மணி நேரம் கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே,
பொதுமக்கள் நலன் கருதி, அரை மணிநேர மின் தடையை சரி செய்ய நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
