/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெருங்கும் புரட்டாசி திருவிழா போலீஸ் ஸ்டேஷன் முன் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற பக்தர்கள் வேண்டுகோள்

ADDED : செப் 24, 2024 01:09 AM
கரூர்: புரட்டாசி திருவிழா நெருங்கும் நிலையில், தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷன் முன் உள்ள, வாகனங்களை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூர் அருகே தான்தோன்றிமலையில் பிரசித்தி பெற்ற, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது.
கடந்த, 21 ல் முதலா-வது புரட்டாசி சனிக்கிழமை விரதம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்-போது ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இந்நி-லையில் வரும் அக்., 4ல் கோவிலில் புரட்டாசி திருவிழா கொடி-யேற்றத்துடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து, நாள்தோறும் திருவீதி உலா, தேரோட்டம், தெய்வ திருமணம் உள்ளிட்ட, நிகழ்ச்சிகள்
நடக்க உள்ளன.இதனால், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கோவிலுக்கு வர உள்ளனர். ஆனால், கோவில் பின்புறம் தனியார் மடத்தில் செயல்பட்டு வரும், தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷன் முன் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்
ஏராளமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்-ளன. அதே பகுதியில்தான், கோவிலின் தேரும் நிறுத்தி வைக்கப்-பட்டுள்ளது.இதனால் கடந்த, 21 ல் முதலாவது சனிக்கிழமை, பக்தர்கள் கோவிலுக்கு எளிதாக செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். எனவே, புரட்டாசி திருவிழா துவங்கும் முன், தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷன் முன், நிறுத்தி
வைக்கப்பட்டுள்ள வாகனங்-களை, அகற்ற போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.