ADDED : நவ 26, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பக்தர்கள் சுவாமி தரிசனம்
குளித்தலை, நவ. 26-
குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், காத்திகை மாத திங்கள் கிழமை சோம வாரத்தை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள் திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்கள் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட தானியங்களை, பாறையில் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். தற்போது ரோப் கார் செயல்படுவதால், அதிகளவு பக்தர்கள் படியில் பயணம் செய்வதை தவிர்த்து, ரோப்காரில் பயணம் செய்து, மலை
உச்சியில் உள்ள ரத்தினகிரீஸ்வரரை வணங்கினர்.