தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தான்தோன்றிமலை கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

தான்தோன்றிமலை கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

தான்தோன்றிமலை கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு


ADDED : செப் 27, 2026 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 07:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்;பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த தமிழ் மாதமாக புரட்டாசி மாதம் போற்றப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகும்.

கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிப்பாடு நடந்தது. அதிகாலை முதலே கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். கோவிலை சுற்றியுள்ள திருமண மண்டபங்களில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையை ஒட்டி, தான்தோன்றிமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

* கிருஷ்ணராயபுரம், நடு அக்ரஹாரத்தில் வராதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, பெருமாளுக்கு அபிேஷகம் செய்து மலர் மாலை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us