ADDED : செப் 27, 2026 07:08 AM
கரூர்;கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சித் துறை தொடர்பாக வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற கலெக்டர் முத்துக்குமரன் கூறியதாவது:
ஊரக
பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்,
மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, குடிநீர், தெருவிளக்கு, வடிகால், பள்ளி
கட்டடம், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலக கட்டடங்கள் உள்ளிட்ட
பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து திட்டங்கள்
வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், நிர்வாக அனுமதி
வழங்கப்பட்டுள்ள பணிகள் அனைத்தும், உரிய காலக்கெடுவிற்குள்
தொடங்கப்பட்டு, பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் தொடர்ந்து
கண்காணிக்கப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை திட்ட இயக்குனர் தனசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
