/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபட்ட பக்தர்கள்
/
மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபட்ட பக்தர்கள்
மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபட்ட பக்தர்கள்
மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபட்ட பக்தர்கள்
ADDED : மே 16, 2025 01:23 AM
கரூர், கரூர் மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் வரிசையில் நின்று, கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு நடத்தினர்.
கரூரில், பிரசித்தி பெற்ற தலமாக மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தின் கடைசியில் திருவிழா தொடங்கி, வைகாசி மாதத்தில் முடிவடையும். கடந்த, 11ல் கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா, கம்பம் நடுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது.
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள், பக்தர்கள் நாள்தோறும் காலை, 6:00 மணி முதல் வீடுகளில் இருந்து தண்ணீர் கொண்டு சென்று, கோவிலில் வைக்கப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.
நேற்று, ஏராளமான பக்தர்கள் கம்பத்துக்கு வரிசையில் நின்று, தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். கோவிலை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று (16ம் தேதி) பூச்சொரிதல் விழா, 18ல் காப்பு கட்டுதல், 26ல் தேரோட்டம், 27ல் மாவிளக்கு ஊர்வலம், பால் குடம் ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், 28ல் கம்பம் அமராவதி ஆற்றுக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
ஜூன், 5ல் பஞ்ச பிரகாரம், 6ல் புஷ்ப பல்லக்கு, 7ல் ஊஞ்சல் உற்சவம், 8ல் அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.