மாரியம்மன் கோவில் தேரோட்டம்வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
மாரியம்மன் கோவில் தேரோட்டம்வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
ADDED : மே 26, 2026 04:34 AM
கரூர்:கரூர் மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழாவையொட்டி, நேற்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழா கடந்த, 10ல், கம்பம் நடுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் இரவு, பல்வேறு சிறப்பு வாகனங்களில் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. கடந்த, 15ல் பூச்சொரிதல் விழா, 17ல் காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று கோவிலில் தேரோட்டம் நடந்தது. அப்போது, பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள், அமராவதி ஆற்றில் அலகு குத்தி கொண்டும், அக்னி சட்டி கலசம் எடுத்து கொண்டும் ஊர்வலமாக, மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். இன்று இரவு, சிறப்பு மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. நாளை மாலை, 5:30 மணிக்கு கம்பம் ஆற்றுக்கு
செல்லுதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.பக்தர்கள் கூட்டம் கடந்த நான்கு நாட்களாக அதிகரித்து வருவதால், கோவிலை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வரும் ஜூன், 4ல் பஞ்ச பிரகாரம், 5ல் புஷ்ப பல்லாக்கு, 6ல் ஊஞ்சல் உற்சவம், 7ல் அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
