ADDED : செப் 20, 2026 07:14 AM
அ நிறம் | அளவு
கரூர்:பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த தமிழ் மாதமாக புரட்டாசி மாதம் போற்றப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகும்.
கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிப்பாடு நடந்தது. அதிகாலை முதலே கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் எழுந்தருளினார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.
கோவில் சுற்றியுள்ள பல்வேறு திருமண மண்டபங்களில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
