ADDED : செப் 20, 2026 07:12 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி:பள்ளப்பட்டி, ஷா நகர் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
பள்ளப்பட்டியில்
இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் ஷாநகர் கார்னர் பகுதியில்
பள்ளிகள் செயல்படுகின்றன. திண்டுக்கல் செல்லும் வாகனங்கள், கனரக
வாகனங்கள், பஸ்கள் உள்ளிட்டவை, ஷாநகர் பகுதியில்
வேகத்தடைஇல்லாததால் வேகமாக செல்கின்றன. குறிப்பாக காலை, மாலை
நேரங்களில் மாணவ, மாணவியர் இந்த சாலையை கடக்கும் போது, விபத்து ஏற்பட்டு
விடுமோ என்ற அச்சத்தில் செல்கின்றனர். இதே போல வயதானவர்களும்
தடுமாறுகின்றனர்.
எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி, ஷா நகர்
கார்னர் பகுதியில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
