தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


ADDED : செப் 20, 2026 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 07:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் பி.சி., பிரிவு மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும், தமிழகத்தை சேர்ந்த பி.சி., - எம்.பி.சி., மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு குடும்பத்தின் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணங்கள் அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மத்திய, மாநில அரசின் இதர கல்வி உதவித் திட்டங்களில் பயன்பெறும் மாணவர்கள், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.

புதுப்பிக்க அக்., 31க்குள்ளும், புதிய விண்ணப்பங்கள் நவ.,30க்குள்ளும் அனுப்ப வேண்டும், மேலும் விபரங்களுக்கு www.bcw.tn.gov.in, இணையதளம், கரூர் கலெக்டர் அலுவலகம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us