ADDED : செப் 20, 2026 07:11 AM
கரூர்:''கரூர்
சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், துரோகிகளை தோற்கடிக்க
வேண்டும்,'' என, மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் கமலகண்ணன் தெரிவித்தார்.
தமிழக
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட
அவைத்தலைவர் திருவிகா தலைமையில், 80 அடி சாலையில் நேற்று முன்தினம்
இரவு நடந்தது.
அதில், மாவட்ட செயலாளர் கமலகண்ணன் பேசியதாவது:
கடந்த சட்டசபை தேர்தலில், கரூர் தொகுதியில் விஜயபாஸ்கரை,
தொண்டர்கள் பாடுபட்டு வெற்றி பெற வைத்தனர். அவர், எம்.எல்.ஏ., பதவியை
ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வுக்கு ஓடி விட்டார். விரைவில், கரூர்
சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். அதில், துரோகிகளை
தோற்கடிக்க வேண்டும். 10 ஆண்டுகள் மாவட்ட செயலாளராகவும்,
ஐந்தாண்டுகள் அமைச்சராக இருந்தவர் விஜய பாஸ்கர். இவர் மீண்டும்
கரூரில் நின்று வெற்றி பெறலாம் என, பகல் கனவு காண்கிறார். அ.தி.மு.க.,வின்
இரட்டை இலை பலத்தை இடைத்தேர்தலில் காட்ட வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
மாநில
அமைப்பு செயலாளர் சின்னசாமி, தலைமை பேச்சாளர்கள் கோபி காளிதாஸ்,
சந்திரசேகர், சிவலிங்கம் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
