/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெங்கடரமண சுவாமி கோவிலில் தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள்
/
வெங்கடரமண சுவாமி கோவிலில் தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள்
வெங்கடரமண சுவாமி கோவிலில் தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள்
வெங்கடரமண சுவாமி கோவிலில் தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள்
ADDED : அக் 05, 2025 01:26 AM
கரூர் :தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மூன்றாவது சனிக்கிழமையொட்டி, நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில், காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.
கரூர், தான்தோன்றிமலையில் பிரசித்தி பெற்ற, கல்யாண வெங்கட ரமண சுவாமி கோவிலில், புரட்டாசி திருவிழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். நடப்பாண்டு, கோவில் மஹா கும்பாபி ேஷக பணிகள் காரணமாக சிறப்பு வாகனங்களில் உற்சவர் திருவீதி உலா, திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கவில்லை.
இந்நிலையில், நேற்று மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர்.
அதேபோல், முடி காணிக்கை செலுத்தவும், நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். மேலும், கோவிலை சுற்றி உள்ள திருமண மண்டபங்களில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.