/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரி-சனம்
/
பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரி-சனம்
பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரி-சனம்
பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரி-சனம்
ADDED : டிச 31, 2025 06:03 AM
கரூர்: கரூர் ரங்கநாத சுவாமி கோவிலில் நடந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, கரூர், அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதை-யொட்டி, கடந்த, 20ல் பகல் பத்து உற்சவம் துவங்-கியது. நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம், மோகினியார் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.முக்கிய நிகழ்ச்சியான, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க-வாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசலை கடந்த நம்பெருமாளை, லட்சக்கணக்கான பக்தர்கள், 'கோவிந்தா... கோவிந்தா...' கோஷம் விண்ணதிர, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரி-சனம் செய்தனர்.
* கரூர், பண்டரிநாதன் சுவாமி பஜனை மடத்-திலும், சொர்க்க வாசல் திறப்பு விழா, நேற்று காலை, 5:00 மணிக்கு நடந்தது. முன்னதாக, மூலவர் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சொர்க்கவாசல் திறப்புக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* கரூர் அருகே, சேங்கல்மலை வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
* கிருஷ்ணராயபும் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை, லட்சுமி நாரா-யண பெருமாள், லட்சுமி தேவியுடன், திருத்-தேரில் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்க-ளுக்கு சேவை சாதித்தார்.
* மகாதானபுரம் அக்ரஹாரத்தில் உள்ள கல்-யாண வரதராஜ பெருமாள் கோவிலில், பெருமாள், தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில், சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
* குளித்தலையில், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த நீலமேக பெருமாள் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நீலமேக பெருமாள், ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்-கையாழ்வார் ஆகிய உற்சவர்கள், சொர்க்க வாசல் வழியாக சென்று அருள்பாலித்தனர். திர-ளான பக்தர்கள், 'கோவிந்தா...கோவிந்தா...' என, பக்தி கோஷம் முழங்கி சொர்க்க வாசலை கடந்து வந்தனர். இதேபோல், குளித்தலை, வைகை-நல்லுார் அக்ரஹாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

