/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெங்கடரமண சுவாமி கோவிலில் பக்தர்கள் வழிபாடு
/
வெங்கடரமண சுவாமி கோவிலில் பக்தர்கள் வழிபாடு
ADDED : செப் 29, 2024 01:16 AM
வெங்கடரமண சுவாமி கோவிலில் பக்தர்கள் வழிபாடு
கரூர், செப். 29-
தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், நேற்று இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
கரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு வரும் அக்., 4ல் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்நிலையில் நேற்று, இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். பிறகு, நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். கோவிலை சுற்றி, பல்வேறு அமைப்புகள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனால், 100 க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.