/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைர விழா
/
பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைர விழா
ADDED : ஜன 28, 2025 07:09 AM
குளித்தலை:  குளித்தலை சுங்ககேட்டில், நேற்று குளித்தலை சாரண மாவட்டம் சார்பில், 24, சாரண மாணவர்கள், 32, சாரணிய மாணவியர், ஏழு ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் இன்று முதல் பிப்., 3 வரை பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைர விழா மற்றும் முத்தமிழ் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு பெருந்திரள அணி நடைபெற உள்ளது.
குளித்தலை சாரண மாவட்டம் சார்பில் பங்கேற்கும் மாணவர்களை, எம்.எல்.ஏ., மாணிக்கம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். டி.எஸ்.பி.. செந்தில்குமார். இன்ஸ்பெக்டர் உதயகுமார் எஸ்.ஐ.,க்கள் சரவணன், பாஸ்கரன், செல்வகுமார், சாரண மாவட்ட தலைவர் சக்திவேல், சாரணர் மாவட்ட ஆணையர் தண்டாயுதபாணி, சாரணிய மாவட்ட ஆணையர் நித்தியா, மாவட்ட செயலாளர் மணிகண்டன் உட்பட மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

