/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்த இயக்குனர்
/
ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்த இயக்குனர்
ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்த இயக்குனர்
ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்த இயக்குனர்
ADDED : மே 05, 2024 02:19 AM
கரூர்:கரூர்
மாவட்டம் நஞ்சை புகழூரில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில்
ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை, மேலாண்மை இயக்குனர்
தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறியதாவது:தமிழ்நாடு
அரசு, பொது மக்களுக்கு தங்கு தடையின்றி சீரான குடிநீர்
வழங்குவதற்காக, குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கூட்டு குடிநீர்
திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நஞ்சை
புகழூரில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைக்கு அருகில் கிணறு
அமைக்கப்பட்டு, காவிரி நீரை எடுத்து செல்ல, 1,422 மி.மீ விட்டமுள்ள
குழாய்கள், 50 கி.மீ., நீளத்திற்கு பதிக்கப்பட்டு,
அரவக்குறிச்சியில் அமைக்கப்பட்டு வரும், 135 மில்லியன் லிட்டர்
கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல பணிகள்
நடக்கிறது.
இங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குழாய்கள்
மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த, 2 நகராட்சிகள், 5 டவுன்
பஞ்., 11 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள, 2,306 ஊரக குடியிருப்புகள்
மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒட்டன்சத்திரம் நகராட்சி, 2
டவுன் பஞ்., 7 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள, 1,366 ஊரக
குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், 4187.84 கோடி ரூபாய்
மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பணிகள் கடந்த
ஏப்., 2023 அன்று துவங்கப்பட்டு, வரும் அக்டோபர் மாதத்திற்குள்
முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில்
பராமரிக்கப்பட்டு வரும், 15 கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் பொது
மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என, அலுவலர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
கலெக்டர்
தங்கவேல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ஆறுமுகம்,
மேற்பார்வை பொறியாளர் முரளி மனோகர், நிர்வாக பொறியாளர்கள் வீராசாமி,
லலிதா உள்பட பலர் உடனிருந்தனர்.