/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாடக நடிகர் சங்க பொதுகுழு கூட்டÝத்தில் தகராறு
/
நாடக நடிகர் சங்க பொதுகுழு கூட்டÝத்தில் தகராறு
ADDED : ஜூலை 07, 2025 04:10 AM
கரூர்: கரூர் அருகே நடந்த நாடக நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கரூர் மாவட்ட நாடக நடிகர் சங்கம், வெள்ளியணை சாலையில், கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ளது. அதில், நேற்று தற்போ-தைய தலைவர் பழனிசாமி தலைமையில், பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது, முன்னாள் தலைவர் அண்ணாதுரை தலை-மையில் சிலர், பொதுக்குழு கூட்டம் நடந்த இடத்துக்கு சென்-றனர். இதனால், பழனிசாமி தரப்பினர், கேட்டை மூடினர். இதை-யடுத்து, அண்ணாதுரை தரப்பினருக்கும், பழனிசாமி தரப்பின-ருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்த, தான்தோன்றிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இருதரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்தி விலக்கி விட்டனர். பின், பழனிசாமி தரப்பும், அண்ணாதுரை தரப்பும், தனித்தனியாக போலீசில் புகாரளித்தனர். இதுகுறித்து, தான்தோன்றிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.