ADDED : அக் 22, 2026 07:23 AM
கரூர்,:கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகாவில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது.
கலெக்டர்
முத்துக்குமரன், பல்வேறு துறை சார்பாக நடக்கும் வளர்ச்சி திட்டப்
பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வெண்ணமலை பகுதியில்
அமைந்துள்ள, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில், புதிய தொழிற்
பழகுநர்களுக்கு வழங்கப்படும் தொழிற்பயிற்சி குறித்தும், காதப்பாறை
பஞ்சாயத்தில் கட்டப்பட்டு வரும், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணிகளையும், மின்னாம்பள்ளி
பஞ்., அலுவலக வளாகத்தில் வி.பி. ஜி -ராம் திட்டத்தின் கீழ் மரக்கன்று
நாற்றாங்காலில் பராமரிக்கப்பட்டு வரும், 6,000 மரக்கன்றுகளையும்
பார்வையிட்டார்.
மேலும் வேளாண்த்துறை சார்பில்,
சங்கராம்பாளையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின்
செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, வாங்கல்
குப்புச்சிபாளையம் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளின் கற்றல்
திறன், ஊட்டச்சத்து உணவின் தரம் குறித்தும், ரேஷன் கடையில் அரிசி,
பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தரம் மற்றும் எடை குறித்தும்,
குப்புச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிடங்கில்
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள கொப்பரை
தேங்காய் தரத்தையும் பார்வையிட்டார்.
ஆய்வின் போது டி.ஆர்.ஓ.,
விமல்ராஜ், கரூர் சப்-கலெக்டர் வெங்கடேஷ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி
முகமை திட்ட இயக்குனர் தனசேகரன், வேளாண் இணை இயக்குனர் மல்லிகா உள்பட
பலர் பங்கேற்றனர்.
