/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வருவாய் துறை சங்கங்கள் சார்பில் மாவட்ட மாநாடு
/
வருவாய் துறை சங்கங்கள் சார்பில் மாவட்ட மாநாடு
ADDED : ஆக 24, 2025 01:14 AM
கரூர், வருவாய் துறையில், அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் நடந்த மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் மாவட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாவட்ட மாநாடு ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் தலைமையில், நாரதகான சபாவில் நேற்று நடந்தது. அதில், சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை, தமிழக அரசு இயற்ற வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில், காலியாக உள்ள பணியிடங்களை, காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். வருவாய் துறையில் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு, கல்வி தகுதி அடிப்படையில் உரிய பணியிடம் வழங்க வேண்டும். அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், மாநில துணைத்தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் பிரபு, நிர்வாகிகள் அரச குமாரன், சக்திவேல், மகேந்திரன், தங்கவேல், தன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.