கரூரில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கரூரில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ADDED : ஜூன் 16, 2026 03:26 AM

கரூர்; கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்-காணிப்பு குழு கூட்டம்
நடந்தது.
இதில், கரூர் எம்.பி., ஜோதிமணி தலைமை வகித்து பேசியதாவது:மத்திய அரசின் திட்டத்திற்கு, ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்து, பொதுமக்கள் மற்றும் மக்கள் பிர-திநிதிகள் முன்வைக்கும் திட்டங்கள் தொடர்பான புகார்களை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காணப்படும்.
மேலும், அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்ற-டைவதை உறுதி செய்வதன் மூலம், நிர்வா-கத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், துாய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் மிஷன், பாரத பிர-தமர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் உள்-ளிட்ட பல்வேறு துறை சார்ந்த, 54 திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர், பேசினார்.
கூட்டத்தில், கலெக்டர் முத்துக்குமரன், கரூர் எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சத்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொ) தனசேகரன் உள்-பட பலர் பங்கேற்றனர்.
