தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கம்பத்தில் தீப்பற்றியதால் பரபரப்பு

கம்பத்தில் தீப்பற்றியதால் பரபரப்பு

கம்பத்தில் தீப்பற்றியதால் பரபரப்பு


ADDED : ஜூன் 16, 2026 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 03:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டியில் உள்ள மின் கம்பம், திடீரென தீப்-பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளப்பட்டி, யூனியன் வங்கி அருகே உள்ள பகு-தியில் வணிக வளாகங்கள், கடைவீதி மற்றும் போக்குவரத்து அதிகம் நடைபெறும் முக்கிய சந்-திப்பாக விளங்குகிறது.யூனியன் வங்கி அருகே உள்ள மின்கம்பத்தில், நேற்று மதியம் 3:30 மணியளவில் திடீரென தீ பற்றியதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்-படுத்தியது. தீப்பிடித்த மின்கம்பத்தில் இருந்து புகை மற்றும் தீப்பொறிகள் வெளிவந்ததால், அருகிலிருந்த கடைகள் தற்காலிகமாக மூடப்பட்-டன.

இதனை கண்ட பொதுமக்கள், உடனடியாக மின்-சார வாரிய

அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழி-யர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்-கொண்டு, அந்த பகுதியில் மின்சாரத்தை தற்கா-லிகமாக நிறுத்தினர். பின்னர் தீப்பிடித்த மின்கம்-பத்தை சரி செய்து, புதிய உபகரணங்களை பொருத்தி மின்சாரத்தை மீண்டும் வழங்கினர்.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர்சேதம் மற்றும் பெரிய பொருட்சேதம் எதுவும் ஏற்பட-வில்லை.

இருப்பினும், பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் அதிக சுமை காரணமாக இதுபோன்ற விபத்துகள் நிகழக்கூடும் என்பதால், மின்சார வாரியம் முன்-கூட்டியே ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us