/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்ட அளவிலான சுகாதார பேரவை கூட்டம்
/
மாவட்ட அளவிலான சுகாதார பேரவை கூட்டம்
ADDED : செப் 20, 2025 02:16 AM
நாமக்கல், :நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட சுகாதார பேரவை என்பது, கிராம அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, சுகாதாரம் தொடர்பான மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவைகளை வட்டார அளவிலான சுகாதார கூட்டத்தில் ஒருங்கிணைத்து, மாவட்ட சுகாதார பேரவைக்கு கோரிக்கைகள் பரிந்துரைக்கப்படும்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில், மாவட்ட அளவில் நிவர்த்தி செய்யக்கூடிய கோரிக்கைகளை, கலெக்டர் தலைமையில் குழு அமைத்து, துறை தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும். மேலும், நிவர்த்தி செய்யப்பட வேண்டிய கோரிக்கைகளை, மாநில சுகாதார பேரவைக்கு பரிந்துரைக்கப்படும். அதன்படி, மாவட்ட சுகாதார பேரவை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி, நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், மாவட்ட நல அலுவலர் பூங்கொடி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.