/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் குடிமகன்களால் தொந்தரவு
/
ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் குடிமகன்களால் தொந்தரவு
ADDED : மார் 16, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர் ரயில்வே ஸ்டேஷனில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும்
பகுதிக்கு
அருகே, காலி இடம் உள்ளது. இங்கு இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது
அருந்தி விட்டு, பாட்டில்களை உடைத்து போட்டு விடுகின்றனர். இதனால், கரூர்
ரயில்வே ஸ்டேஷன் வளாக பகுதியில், உடைந்த மது பாட்டில்கள் சிதறி கிடக்கிறது.
அந்த வழியாக இரவு நேரத்தில் செல்ல, பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.
ரயில்வே
ஸ்டேஷன் வளாகத்தில், மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுத்து,
மதுபாட்டில்களை, உடனடியாக அப்புறப்படுத்த ரயில்வே போலீசார் நடவடிக்கை
எடுக்க வேண்டியது அவசியம்.

