தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/பள்ளிகளில் தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளிகளில் தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளிகளில் தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : நவ 06, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 05:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், பாதுகாப்புடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து, அரவக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் மாணவர்களிடம் கூறுகையில், ''தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன், பிறருக்கு இடையூறு இல்லாமல், வெடி பொருட்களை கையாள வேண்டும். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும். வெடி மற்றும் மத்தாப்பு கொளுத்தும் போது மருத்துவமனை, பெட்ரோல், மண்ணெண்ணெய் கிடங்கு மற்றும் வழிபாட்டு தலங்கள் பள்ளி, கல்லுாரி, மார்க்கெட் பகுதி, வாகனங்கள் செல்லும் சாலை, டிரான்ஸ்பார்மர் மற்றும் மக்கள் நடமாடும் பகுதிகளில் வெடி வெடிப்பதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.

இதே போல, அரவக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை காளிக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நடந்தது. திறந்தவெளி

மைதானத்தில் பட்டாசு வெடிக்கலாம். குடிசை வீடு, வைக்கோல் போர், தென்னை மரங்கள், கீற்று கொட்டகை அருகே வெடி வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பெரியவர்கள் முன்னிலையில், அருகில் தண்ணீர் வைத்து

பாதுகாப்பாக வெடிக்க வேண்டும்.அதிக சத்தத்தை ஏற்படுத்த கூடிய

வெடிகளை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us