/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க.,வில் இணைந்த தி.மு.க., நிர்வாகி
/
அ.தி.மு.க.,வில் இணைந்த தி.மு.க., நிர்வாகி
ADDED : டிச 14, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் கரூர் மாநகராட்சியை சேர்ந்த, தி.மு.க., நிர்வாகி நேற்று, அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி, 1 வது வார்டு தி.மு.க., அவைத்தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.
அப்போது, மாவட்ட ஐ.டி., விங்க் செயலாளர் சிவராஜ், பகுதி செயலாளர் சக்திவேல், வார்டு செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

