/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் தி.மு.க., பொது கூட்டம்
/
குளித்தலையில் தி.மு.க., பொது கூட்டம்
ADDED : மார் 05, 2024 12:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை, பேராளம்மன்கோவில் தெருவில் நேற்று நகர தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொது கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமை வகித்தார். குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலர் சந்திரன் வரவேற்றார்.
மாவட்ட பஞ்., துணைத்தலைவர் தேன்மொழிதியாகராஜன், நகராட்சி தலைவர் சகுந்தலா மற்றும் மாநில, மாவட்ட, பொறுப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநில பொறியாளர் அணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான துரை சரவணன், தி.மு.க., அரசின் சாதனைகள் குறித்து பேசினார். மேற்கு ஒன்றிய செயலர் தியாகராஜன் நன்றி கூறினார்.

