/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம்
/
தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம்
ADDED : ஆக 19, 2025 01:19 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, மருதுார் நகர தி.மு.க., இளைஞரணி சார்பில் கருணாநிதி பிறந்தநாள் மற்றும் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் கணேசபுரத்தில் நடைபெற்றது.
நகர இளைஞரணி அமைப்பாளர் வினோத்குமார் வரவேற்றார். மாவட்ட இளைஞர் அணி துணை செயலர் யுவராஜ், ஒன்றிய செயலர் தியாகராஜன், டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசின் நான்காண்டு சாதனைகள் குறித்து எம்.எல்.ஏ., மாணிக்கம் பேசினார். இந்தக் கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய. நகர பொறுப்பாளர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள், டவுன் பஞ்.,கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரங்கநாதன், உதயகுமார் நன்றி தெரிவித்தனர்.