/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆட்டோ டிரைவர்களுக்கு தி.மு.க., சார்பில் சீருடை
/
ஆட்டோ டிரைவர்களுக்கு தி.மு.க., சார்பில் சீருடை
ADDED : மே 05, 2025 02:17 AM
கரூர்: கரூரில் தி.மு.க., சார்பில், 519 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
கரூரில், தி.மு.க., மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி தலைமை வகித்து பேசுகையில்,''தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,'' என்றார்.
இதையடுத்து, 519 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்கடும் வெயிலால் மக்கள் அவதி
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், அக்னி நட்சத்திரம் ஆரம்ப நாளான நேற்று கடுமையான வெயில் காரணமாக மக்கள் அவதிப்பட்டனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனுார், மணவாசி, வீரராக்கியம், பஞ்சப்பட்டி, கள்ளப்பள்ளி, வரகூர், வயலுார், சரவணபுரம், சிவாயம், பாப்பகாப்பட்டி, கருப்பத்துார், வேங்காம்பட்டி கிராமங்களில் நேற்று நண்பகல் நேரத்தில் இருந்து அதிகமான வெயில் அடித்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். விவசாய பணிகளில் தொடர்ந்து ஈடுபட முடியாமல், தொழிலாளர்கள் அவதிப்பட்டனர். இந்த பகுதியில் தொடர்ந்து, 100 டிகிரிக்கு மேல் வெயில் இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.