/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரேஷன் ஊழியர் போனசில் பாகுபாடு கூடாது தி.மு.க., தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை

ADDED : அக் 27, 2024 04:00 AM
கரூர்: 'ரேஷன் கடை ஊழியர்களுக்கு பாகுபாடு இல்லாமல் போனஸ் வழங்க வேண்டும்' என, தி.மு.க.,வின் தொ.மு.ச., கூட்டுறவு ரேஷன் கடை தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் சர-ணவன் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், 84 கூட்டுறவு சங்கங்களின் கீழ், 514 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 2000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தீபாவளி பண்டிக்கை முன்னிட்டு, தமிழக அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்-பட்டு வருகிறது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் பணிபுரியம் ரேஷன் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அரசு அறிவித்தப்படி, 20 சதவீதம் போனஸ் தொகையை, அனைத்து கூட்டுறவு சங்கங்-களும் வழங்க வேண்டும். இதில், எவ்விதமான பாகுபாடு இல்-லாமல் வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.