sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

எஸ்.ஐ.ஆர்., தொடர்பான சந்தேகமா? தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்

/

எஸ்.ஐ.ஆர்., தொடர்பான சந்தேகமா? தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்

எஸ்.ஐ.ஆர்., தொடர்பான சந்தேகமா? தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்

எஸ்.ஐ.ஆர்., தொடர்பான சந்தேகமா? தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்


ADDED : நவ 12, 2025 01:31 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், 'எஸ்.ஐ.ஆர்., தொடர்பானசந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் (எஸ்.ஐ.ஆர்.,) கணக்கெடுப்பு படிவம் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து திரும்பப்பெறும் பணி விரைவில், அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஏற்கெனவே வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட இரட்டை கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து கையொப்பமிட்ட இரண்டு படிவங்களில் ஒரு படிவத்தினை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்திட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட மற்றொரு கணக்கீட்டு படிவத்தில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் படிவத்தை பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமாக, தன் கையொப்பமிட்டு வழங்குவார். வீடு தோறும் கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெற வரும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர்கள் போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இப்பணி தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அரவக்குறிச்சி தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலக தொலைபேசி எண் 04320 231958, கரூர் தொகுதிக்கு, 04324 260745, கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு 04323 243366, குளித்தலை தொகுதிக்கு 04323 222395 மற்றும் கலெக்டர் அலுவலக கட்டணமில்லா தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1950 -ஐ வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம்.

இதுவரை வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்படவில்லை எனில், சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலரை தொடர்பு கொண்டு கணக்கீட்டு படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். மேலும் https://voters.eci.gov.in என்ற இணைய தளத்தை பயன்படுத்தி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பயன்

படுத்தி இணைய வழியில் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us