/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குண்டும், குழியுமான சாலை சீரமைப்பு
/
குண்டும், குழியுமான சாலை சீரமைப்பு
ADDED : நவ 12, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம், மகாத்மா காந்தி சாலை பகுதிகளில் ஏராளமான வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், நுால் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையால் சாலையின் மையப்பகுதியில் சேதமடைந்து, ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
இதையடுத்து சாலையை சீரமைத்து தருமாறு கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜியிடம், அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் அங்கு, காணப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டு சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

