/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புன்னம்சத்திரம் சாலையில் வடிகால் வசதி தேவை
/
புன்னம்சத்திரம் சாலையில் வடிகால் வசதி தேவை
ADDED : நவ 09, 2025 03:59 AM
கரூர்: க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம்சத்திரம் கடைவீதியில், பஞ்., அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், மின்வாரிய அலுவ-லகம், வங்கி போன்றவற்றுக்கு மக்கள் வந்து செல்கின்றனர்.
கரூர், கொடுமுடி, ஈரோடு போன்ற ஊர்களுக்கு பஸ் ஏறி செல்-லவும் வருகின்றனர். கடந்த, பத்து ஆண்டுகளுக்கு முன் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு இரு புறங்களிலும் மழைநீர் வடிகால் வசதி அமைக்கப்பட்டது. தற்போது ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, மழைக்காலங்-களில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. மழை நீர் சாலையோரம் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இங்கு, கடும் துர்நாற்றம் வீசுவ-தோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் தேவையான வடிகால் வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

