/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முருங்கை பவுடர் தொழிற்சாலை அரவக்குறிச்சியில் அமையுமா?
/
முருங்கை பவுடர் தொழிற்சாலை அரவக்குறிச்சியில் அமையுமா?
முருங்கை பவுடர் தொழிற்சாலை அரவக்குறிச்சியில் அமையுமா?
முருங்கை பவுடர் தொழிற்சாலை அரவக்குறிச்சியில் அமையுமா?
ADDED : நவ 09, 2025 04:00 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது, பல ஆண்டுகளாக விவசாயிகளின் கனவா-கவே உள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில், 10,000க்கும்மேற்-பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் முருங்கைக்காய் பயிரிடப்படுகிறது. இப்பகுதி விவசாயிகளின் ஜீவாதாரமாக, முருங்கை சாகுபடி விளங்குகிறது. ஆண்டில், ஒன்பது மாதங்களுக்கு முருங்கைக்காய் விளைச்சல் உள்ளது. இப்பகுதியில், சாகுபடி செய்யப்படும் கொடி முருங்கை, செடி முருங்கை ஆகியவற்றுக்கு, வெளி மாநி-லங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. விளைவித்த முருங்கைக்காய் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள சந்தைகளிலும், இடைத்தரகர்கள் மூலம் விற்கப்படுகிறது. இடைத்தரர்கள் மூலம் குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் வாங்கி, அதிக விலைக்கு விற்பதால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.திருமண சீஸன், விழா போன்ற காலத்தில், 25 காய்களை கொண்ட ஒரு கட்டு விலை, 25 முதல், 50 ரூபாய் வரையும், முருங்கை விளைச்சல் இல்லாத நேரத்தில், ஒரு கட்டு, 150 ரூபாய் வரை விலை போகும். விழா, சீஸன் இல்லாத நேரம், முருங்-கைக்காய் விளைச்சல் அதிகளவு உள்ள போது, முருங்கை விலை மிகவும் குறைந்து விடுகிறது. முருங்கைக்காய் இருப்பு வைக்க முடியாமலும், பாதுகாக்க முடியாமல் போவதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, பீஹார், மேற்கு வங்-காளம், ஒடிஸா போன்ற மாநிலங்களில், மக்கள் அன்றாட உணவு பொருளாக முருங்கையை பயன்படுத்தி வருகின்றனர். அதிக நார்-சத்து கொண்ட முருங்கை காய் பவுடர் தொழிற்சாலை, அரவக்கு-றிச்சி பகுதியில் அமைத்தால், விவசாயிகளின் உற்பத்தி பொருட்க-ளுக்கு நியாயமான விலை கிடைப்பதுடன், மறைமுகமாகவும், நேரிடையாகவும், 500க்கு மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கரூர் மாவட்டத்தில், மிகவும் பின்தங்கிய பகுதியான அரவக்குறிச்சியில் விவசாயிகளின் வசதிக்காக, முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் பல ஆண்டு கனவாக உள்ளது.
இதுகுறித்து, அரவக்குறிச்சி முருங்கை விவசாயிகள் கூறியதா-வது:
அரவக்குறிச்சி சுற்று வட்டாரத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சீஸன் மற்றும் விளைச்சல் குறைவு காலங்களில், ஒரு கட்டு முருங்கை, 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. முருங்கை வரத்து அதிகமாக உள்ள சீசன்களில் இருப்பு வைத்து, சீஸன் நேரத்தில் விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

