/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்
/
சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்
ADDED : மார் 22, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை மண்மங்கலம் பகுதியில் சாக்கடை கால்வாயில், குப்பை, கழிவுகள் தேங்கியுள்ளது.
இதனால் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளி யேறும் கழிவு நீர் பல இடங்களில், சாலையில் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் கொசு உற்பத்தியும், துர்நாற்றமும் ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் சாலையில் செல்லும் நிலை உள்ளது. தொற்று நோய் ஏற்படும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர். சாக்கடை கால்வாயில் உள்ள கழிவுகளை உடனடியாக அகற்றி துார் வார, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

