டாஸ்மாக் 'பார்'கள் மூடப்பட்டதால் ரோட்டோரம் மது குடிக்கும் அவலம்
டாஸ்மாக் 'பார்'கள் மூடப்பட்டதால் ரோட்டோரம் மது குடிக்கும் அவலம்
ADDED : ஜூலை 06, 2026 04:49 AM

கரூர்:கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில், 'பார்'கள் மூடப்பட்டதால், ரோட்டோரம் மது குடிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கரூர்
மாவட்டத்தில், 72 டாஸ்மாக் கடைகளில், 30 பார்கள் செயல்பட்டு
வருகின்றன. இந்த கடைகளை ஒட்டிய காலியிடத்தில் தின்பண்டம்,
குளிர்பானம் விற்க, தனியாருக்கு, 'பார்' உரிமம் வழங்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதத்துடன், 'பார்' டெண்டர் முடிந்தது. இந்த அவகாசம்
முடிந்ததால், 'பார்' நடத்துவதற்கான அனுமதி, மேலும், மூன்று
மாதங்களுக்கு நீட்டிக்கப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டது.தற்போது,
'பார்'களை மூட வேண்டும் என, டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
'பார்'கள் மூடப்பட்டுள்ளதால், 'குடி'மகன்கள் பலர், காலை, 12:00 முதல்
இரவு, 10:00 மணி வரை செயல்படும் எப்.எல்., 2 'பார்'களை தேடி
செல்கின்றனர். ஆனால், டாஸ்மாக் கடைகளில், பலர் மதுபாட்டில்களை வெளியே
வாங்கி வந்து ரோட்டோரம் நின்றபடி குடிக்கின்றனர். இதில்,
ரோட்டோரம் வாகனங்கள் நிறுத்தி மது அருந்துவதால், போக்குவரத்து
நெரிசல் ஏற்படுகிறது.
அதில், கரூர் மருத்துவ கல்லுாரி அருகில்
கொளந்தாகவுண்டனுார் டாஸ்மாக் செயல்படும் ரோட்டில் ஆம்புலன்ஸ்
உள்பட வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றன. காலி பாட்டில்,
டம்ளர்களை அந்தந்த இடத்திலேயே வீசி செல்கின்றனர். பொது இடங்களை,
'பார்' ஆக மாற்றி விட்டதால், கடந்துசெல்ல பெண்கள், குழந்தைகள்
அச்சப்படுகின்றனர். சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டு வரும்
நிலையில், விரைவில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
