ADDED : ஜூலை 06, 2026 04:50 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
மாவட்டத்தில், சில வாரங்களாக மழை இல்லாததால், நிலங்கள் வறட்சியாக
உள்ளன.
ஆடி மாதம் துவங்குவதற்கு முன்பே, நேற்று கரூர் மாவட்டத்தின் பல
பகுதிகளில் சூறாவளி காற்று வீசியது. பலத்த காற்று வீசியதால் சாலையில்
உள்ள மணல் துகள்கள், வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்ததால், வாகனத்தை
இயக்க முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். சாலைகளில் எதிரே
வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
பலத்த காற்றால், கரூர், அமராவதி ஆற்றில் புழுதி புயல் காரணமாக,
சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். சூறாவளி
காற்றால் பல இடங்களில் மரக்கிளைகள் உடைந்து விழுந்தன. சில இடங்களில்
மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசியதால் மின்சாரம் தடைபட்டது.
