தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சரவணபுரத்தில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணி

சரவணபுரத்தில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணி

சரவணபுரத்தில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணி


ADDED : செப் 11, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்:சரவணபுரம் கிராமத்தில் பஞ்சாயத்து குடிநீர் தொட்டி குழாய் பராமரிப்பு பணிகள் நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சரவணபுரம், பகுதியில் குடிநீர் தொட்டி உள்ளது. இதில் தண்ணீர் ஏற்றி, அப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யும் பணி நடக்கிறது. பழைய குடிநீர் குழாய் பழுது காரணமாக, தண்ணீர் ஏற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் பஞ்சாயத்து சார்பில், குடிநீர் தொட்டிக்கு நீர் ஏற்றும் வகையில் பழைய குழாய்கள் அகற்றப்பட்டன.

அதற்கு பதிலாக புதிதாக பிளாஸ்டிக் குழாய்கள் அமைக்கப்பட்டன. இந்த பணிகளில் பஞ்சாயத்து தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மேலும், புதிய குழாய் மூலம் தண்ணீர் ஏற்றி மக்களுக்கு வினியோகம் செய்யும் வகையில் பணி துரிதமாக நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us