ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி
ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி
ADDED : செப் 11, 2026 06:48 AM
குளித்தலை:குளித்தலையில்
தாலுகா அனைத்து வணிகர் சங்கங்களின் சார்பாக, தமிழ்நாடு வணிகர்
சங்கத்தின் நிறுவன தலைவர் வெள்ளையனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்
மற்றும் ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடந்தது.
அனைத்து
வணிகர் சங்கங்களின் தாலுகா தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார்.
செயலாளர் சதக்கத்துல்லா, பொருளாளர் வினோத், முன்னாள் நகராட்சி தலைவர்
பல்லவிராஜா முன்னிலை வகித்தனர். ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு
தெரிவித்து திருச்சி மாவட்ட தலைவர் பாபு பேரணியை தொடங்கி வைத்தார்.
இதில்,
ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்ப்போம், சுதேசிய வர்த்தகத்தை காப்போம் என,
முழக்கங்கள் எழுப்பி, 100க்கும் மேற்பட்டோர் பதாகைகளை கையில் ஏந்தி
அரசு மருத்துவமனை, ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் வழியாக,
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் உள்ள காந்தி சிலையை வந்தடைந்தனர்.
அங்கு
அலங்கரிக்கப்பட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் நிறுவன தலைவர்
வெள்ளையனின் திருவுருவ படத்திற்கு, மாலை அணிவித்து மலர் துாவி
மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அன்னதான வழங்கப்பட்டது.
