/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'30 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரல': காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ADDED : ஆக 29, 2024 07:46 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, 30 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து, கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த, 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால், நேற்று முன்தினம் டவுன் பஞ்., அலுவலகத்தில் சென்று புகாரளித்துள்ளனர். அப்போது, நாளை (நேற்று) தண்ணீர் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், நேற்று காலையும் குடிநீர் வழங்காததால், 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன், ராசிபுரம் - -திருச்செங்கோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக சென்ற கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, ஒரு நபர், அதிகாரி மீது கை வைத்து அழைத்துள்ளார். இதனால் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.