/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிரதான குழாய் உடைப்பால் குடிநீர் வீண்
/
பிரதான குழாய் உடைப்பால் குடிநீர் வீண்
ADDED : டிச 13, 2024 08:45 AM
புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி நகராட்சி பகுதி மக்க-ளுக்கு, பவானிசாகர் அணையிலிருந்து, இரண்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகிக்-கப்படுகிறது. இதற்காக, 16 கி.மீ., துாரத்துக்கு மாநில நெடுஞ்சாலை வழியாக பிரதான குழாய் அமைக்கப்பட்டுள்ளது. முதலாம் குடிநீர் திட்ட குழாய் பதித்து, 40 ஆண்டுகளுக்கும் மேலா-வதால், அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்படுகி-றது. பவானிசாகர்--புன்செய் புளியம்பட்டி சாலை, புதுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு நேற்று காலை தண்ணீர் வீணாக ஓடி, சாலையோரம் குளம்போல் தேங்கியது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: நகராட்சியில் ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வருகி-றது. இந்நிலையில் பிரதான குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், போதிய குடிநீர் கிடைப்-பதில்லை. நகராட்சியில் மற்ற திட்டப்பணிகளை விட குடிநீர் பராமரிப்புக்கே அதிக நிதி செலவி-டப்படுகிறது. தரமில்லாத குழாய்கள் அமைப்-பதே இதற்கு காரணம். இவ்வாறு கூறினர்.

