/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்குவாரியில் விழுந்து டிரைவர் பலி; அ.ம.மு.க., செயலாளர் மீது வழக்கு
/
கல்குவாரியில் விழுந்து டிரைவர் பலி; அ.ம.மு.க., செயலாளர் மீது வழக்கு
கல்குவாரியில் விழுந்து டிரைவர் பலி; அ.ம.மு.க., செயலாளர் மீது வழக்கு
கல்குவாரியில் விழுந்து டிரைவர் பலி; அ.ம.மு.க., செயலாளர் மீது வழக்கு
ADDED : ஆக 22, 2024 03:53 AM
கரூர்: க.பரமத்தி அருகே, கல் குவாரியில் டாரஸ் லாரி டிரைவர் விழுந்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட அ.ம.மு.க., செயலாளர் உள்பட, நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி ஆயங்குடி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர், 41; லாரி டிரைவர். இவர், கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே தலையூத்துப்பட்டி பகுதியில் உள்ள, ஸ்ரீ செல்வ விநாயகா புளூ மெட்டல் கல் குவாரியில் கடந்த, ஐந்தாண்டுகளாக டிரைவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த, 19ல் கல் குவாரியில் உள்ள, 90 அடி பள்ளத்தில் பாறைக்குழியில் இருந்து டாரஸ் லாரியில், தண்ணீரை ஏற்றிக் கொண்டு, டிரைவர் சுதாகர் மேலே ஓட்டிக் கொண்டு சென்றுள்ளார்.
அப்போது, 70 அடிக்கு மேலே சென்ற பிறகு, டிரைவர் சுதாகர், டாரஸ் லாரியுடன் தவறி, கல்குவாரி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து, சுதாகரின் மனைவி தாரணி, 36; கொடுத்த புகாரின்படி, கல்குவாரி பங்குதாரர்கள், கரூர் மாவட்ட அ.ம.மு.க., செயலாளர் தங்கவேல், சுப்பிரமணி, சக்திவேல், கந்தசாமி ஆகிய நான்கு பேர் மீது, பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல், கவன குறைவாக இருந்ததாக, க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.