ADDED : ஜூலை 09, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, லாரி மீது டூவீலர் மோதிய விபத்தில், டிரைவர்
உயிரிழந்தார்.
கரூர்
மாவட்டம், மண்மங்கலம் ஆத்துார் பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன்,
32; டிரைவர். இவர் நேற்று முன்தினம், கரூர் - ஈரோடு சாலை நொய்யல்
பகுதியில், ஸ்பிளண்டர் பிளஸ் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது, டூவீலர் நிலை தடுமாறி மோதியது.
அதில்,
தலையில் படுகாயம் அடைந்த கோபால கிருஷ்ணன், கொடுமுடி அரசு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து, கோபால கிருஷ்ணனின் மனைவி தமிழரசி, 27, போலீசில் புகார்
செய்தார்.
இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை
சேர்ந்த லாரி டிரைவர் தாமோதரன் மீது, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
