/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேறும், சகதியுமான மாற்றுப்பாதை திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்
/
சேறும், சகதியுமான மாற்றுப்பாதை திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்
சேறும், சகதியுமான மாற்றுப்பாதை திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்
சேறும், சகதியுமான மாற்றுப்பாதை திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 25, 2024 02:11 AM
குளித்தலை, டிச. 25-
குளித்தலை அடுத்த கடவூர் யூனியன் மைலம்பட்டி சாலை, நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை வழியாக கரூர், சேலம், தர்மபுரி, கோயம்புத்துார், பெரம்பலுார், திருச்சி, சென்னை உள்பட பிற மாவட்ட பகுதிகளுக்கும், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை போன்ற தென் மாவட்ட பகுதிகளுக்கும், தினந்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வந்தது. மேலும், மைலம்பட்டி பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியும் செயல்பட உள்ளது. இதனால் எதிர்வரும் காலத்தை கருத்தில் கொண்டு மைலம்பட்டி பஸ் ஸ்டாப்பில் ரவுண்டானா மற்றும் பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாலங்களுடன் கூடிய ரவுண்டானா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியால், இந்த வழியாக சென்று வந்த வாகனங்கள், மாற்றுப்பாதையாக தனியார் ரியல் எஸ்டேட் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த சாலை, தற்போது பெய்த மழையால், குண்டும், குழியுமாக மாறி, சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி வருகின்றனர். எனவே, தரமான மாற்றுப்பாதையாக அமைத்து தர வேண்டும் என,
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

