/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் நகராட்சி பகுதியில் டி.ஆர்.ஓ., ஆய்வு பணி
/
புகழூர் நகராட்சி பகுதியில் டி.ஆர்.ஓ., ஆய்வு பணி
ADDED : அக் 19, 2024 02:10 AM
கரூர்: புகழூர் நகராட்சி பகுதிகளில், நேற்று டி.ஆர்.ஓ., ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி பகுதியில், 128க்கும் மேற்-பட்ட சுய உதவிக்குழுக்கள் செயல்படுகிறது. அவர்கள், தேசியம-யமாக்கப்பட்ட வங்கிகளில், கடனுதவி பெற்று பல்வேறு, பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், புகழூர் நகராட்சி பகுதியில் சுய உதவிக்குழுவினருக்கு தனியாக, கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைய-டுத்து, புகழூர் நகராட்சி பகுதிகளில், கட்டடம் கட்டும் இடத்தை தேர்வு செய்ய, டி.ஆர்.ஓ., கண்ணன் நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, தாசில்தார் தனசேகரன், நகராட்சி ஆணையாளர் ேஹமலதா, ஆர்.ஐ., சுதா
உள்ளிட்ட, அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

