ADDED : டிச 25, 2024 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போதைக்கு அடிமையானவர் உயிரிழப்பு
அரவக்குறிச்சி, டிச. 25-
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நெடுங்காடு வயல் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு,48; இவர் மதுவுக்கு அடிமையாகி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்தார். அரங்கபாளையத்தில் உள்ள அணைப்புதுார் சாலையில் நடந்து செல்லும் போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.