/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் போதைபொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் போதைபொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் போதைபொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் போதைபொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 30, 2024 02:18 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்.. இரும்பூதிபட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், நேற்று போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமை வகித்தார். குளித்தலை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் உதயகுமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அசோகன், மகளிர் இன்ஸ்பெக்டர் கலை-வாணி, சிவாயம் பஞ்., தலைவர் திருமூர்த்தி, முகாம் ஆர்.ஐ., பாலு, முகாம் தலைவர் மகேந்திர தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் டி.எஸ்.பி., செந்தில்குமார் பேசுகையில், '' அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துவது குற்றமாகும், இச்செயலில் ஈடுப-டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
இன்ஸ்பெக்டர் உதயகுமார் பேசுகையில், '' தேவையில்லாத இடையூறுகள் ஏற்படுத்தக் கூடாது, பொது மக்களுக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும், பொது மக்களுக்கு என்றும் நண்பனாக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது,'' என்றார்.
மகளிர் இன்ஸ்பெக்டர் கலைவாணி, 'பெண் குழந்தை பாது-காப்பு, பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியருக்கு ஏற்படும் இன்னல்-களை தவிர்த்தல், பெண்களுக்கு எதிராக செயல்படும் ஆண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை விழிப்புணர்-வுடன் துண்டு நோட்டீஸ்கள் கொடுத்து' பேசினார்.
குளித்தலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அசோகன் பேசு-கையில், ''பொதுமக்கள் சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டும். 18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். மீறி ஓட்டுபவர்களின் வாக-னங்கள் பறிமுதல் செய்வது மட்டுமின்றி, அவர்களது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்படும்,'' என்றார்.
வருவாய்த்துறையினர், காவல் துறையினர், மக்கள் பிரதிநிதிகள் என, 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து
கொண்டனர்.

