ADDED : ஆக 15, 2025 02:33 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் போதை பொருள்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அரவக்குறிச்சி டவுன் பஞ்., தலைவர் ஜெயந்தி மணிகண்டன் பரிசு வழங்கினார். பேரூராட்சி செயலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் முத்தையா நன்றி கூறினார். ஆசிரியர்கள், மாணவியர் அனைவரும் போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்.
எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். போதைபொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலவாழ்வுக்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்று வேன்' என, உளமாற கூறுகிறேன் என
மாணவியர் உறுதிமொழி எடுத்தனர்.